USA, Scaffolding, Construction Worker, Occupation, Construction Industry

டொலரின் பெறுமதி வீழ்ச்சியுடன் ஒப்பிடுகையில் கட்டுமான துறையில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் மற்றும் உபகரணங்களின் விலை குறைப்பு தொடர்பில் நாளை (30) விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

கட்டுமான துறையின் மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக அது தொடர்பான பல வாழ்வாதார வழிகள் ஸ்தம்பிதமடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, டொலரின் பெறுமதியுடன் ஒப்பிடுகையில் சந்தையில் பொருட்களின் விலை திருத்தம் தொடர்பில் விசேட விசாரணைகளை மேற்கொள்ளுமாறு வர்த்தக மற்றும் பொருளாதார மற்றும் முதலீட்டு கொள்கை திணைக்களத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேலும் தெரிவித்தார்.