இலங்கையில் தயாரிக்கப்பட்ட வேகா (Vega) கார்களுக்கு இன்று அனுமதி கிடைத்தது. பதிவு இலக்கத் தகடும் வழங்கப் பட்டது.
இலங்கையில் தயாரிக்கப்பட்ட வேகா (Vega) கார்களுக்கு இலங்கை மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் அனுமதி இன்று கிடைத்துள்ளது .
வேகா கார்கள் மோட்டார் போக்குவரத்து துறையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.இதன்படி, இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதலாவது வேகா காருக்கான பதிவு இலக்கத் தகடு இன்று (03) வழங்கப்பட்டது.
அங்கு மோட்டார் வாகன திணைக்கள ஆணையாளர் நாயகத்தினால் வேகா காரை வடிவமைத்த ஹர்ஷ சுபசிங்கவிடம் குறித்த இலக்க தகடு கையளிக்கப்பட்டது.போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் நடைபெற்ற வைபவத்தில் அமைச்சர் ரமேஷ் பத்திரனவும் கலந்துகொண்டார்