பிரதி பொலிஸ் மா அதிபரின் வீட்டிற்குள் புகுந்த திருடன் (CCTV வீடியோ)
ஓய்வுபெற்ற பிரதி பொலிஸ் மா அதிபர் சரத் லுகொடவின் கொஹுவல இல்லத்தில் 17 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளை திருடிய 19 வயதுடைய சந்தேக நபர் ஆனமடுவ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபரை கல்கிஸ்ஸ பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்த போது, திருடப்பட்ட தங்கப் பொருட்கள் பல்வேறு இடங்களுக்கு விற்பனை செய்யப்பட்டு அனைத்து பொருட்களும் உருக்கப்பட்டிருதமை கண்டுபிடிக்கப்பட்டது.கடந்த ஆகஸ்ட் மாதம் 22ம் திகதி, ஓய்வு பெற்ற பிரதி பொலிஸ் மா அதிபர் மற்றும் குடியிருப்பாளர்கள் வீட்டை விட்டு வெளியே வந்த போது வீட்டுக்குள் புகுந்து திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சந்தேக நபர் சொத்தை திருட வந்தபோது, ஓய்வு பெற்ற பிரதி பொலிஸ் மா அதிபரின் வீட்டின் முன்பு கைத்தொலைபேசியை காதில் வைத்துக்கொண்டு காத்திருப்பது அங்கிருந்த சிசிரிவி கேமராவில் பதிவாகியுள்ளது.கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தலங்கம, மிரிஹான மற்றும் கல்கிஸ்ஸ ஆகிய பிரதேசங்களில் இடம்பெற்ற பல திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.