மஸ்கெலியா இளைஞனுக்கு பயாகல பகுதியில் நேர்ந்த சோகம்!
பயாகல தியலகொட கடற்கரையில் நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.நேற்று (05) மாலை 5.45 மணியளவில் பயாகல தியலகொட கடற்கரையில் நான்கு இளைஞர்கள் நீராடச் சென்றுள்ளனர்.
அவர்களில் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.மஸ்கெலியா பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய நபரே நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
இவர்கள் பொரலஸ்கமுவ பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிவதாக தெரிவிக்கப்படுகிறது