உயர்தர பரீட்சை வினாத்தாள் பற்றிய அறிவிப்பு

2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை ஜனவரி 23 ஆம் திகதி முதல் பெப்ரவரி 17 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

2022ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை வினாத்தாள்களை பரீட்சை ஒருங்கிணைப்பு நிலையங்களுக்கு விநியோகிக்கும் பணி இன்று (21) ஆரம்பமாகவுள்ளது.

இலங்கை பரீட்சைகள் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.முதல் 6 நாட்களுக்கு தேவையான வினாத்தாள்கள் முதலில் விநியோகிக்கப்படும்.

பரீட்சை நடத்துவதற்கு தேவையான பணியாளர்கள் தயார்படுத்தப்பட்டுள்ளனர்.2022ஆம் ஆண்டுக்கான பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் எதிர்வரும் 23ஆம் திகதி ஆரம்பகாவுள்ளன

இதற்கமைய, கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் மாணவர்களுக்கு தபாலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.எனவே, பரீட்சை அனுமதி அட்டைகள் கிடைக்காத பரீட்சார்த்திகள், பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளத்தில் அதனை பதிவிறக்கம் செய்வதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் பரீட்சை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளது.

மேலும் பாடசாலை அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தரவுத்தளத்திற்குள் பிரவேசித்து பாடசாலை பரீட்சாத்திகளுக்கான அனுமதி அட்டைகளைப் பெற்றுக்கொள்ள முடியுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் பரீட்சார்த்திகள் தமது அடையாள அட்டை மற்றும் தொலைபேசி இலக்கங்களை பயன்படுத்தி அனுமதி அட்டைகளை பதிவிறக்கம் செய்ய முடியுமெ்.அனுமதி அட்டைகளை பதிவிறக்கம் செய்ய முடியாத பரீட்சார்த்திகள் பரீட்சைகள் திணைக்களத்தை தொடர்புகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இதேவேளை,பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் செல்லுபடியாகும் அடையாள அட்டை அல்லது அனுமதி அட்டை இல்லாவிட்டாலும் பரீட்சைக்கு தோற்ற முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *