பண்டாரகம, ​கெலனிகம சந்தியில் வேன் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

கதிர்காம யாத்திரை சென்று திரும்பிய வேன் ஒன்று, பண்டாரகமவிலிருந்து ஹொரணை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது, ​​கெலனிகம கும்புக பக்க வீதியிலிருந்து பிரதான வீதியில் நுழைந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதாக பண்டாரகம பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவருக்கு தலை மற்றும் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது.மோட்டார் சைக்கிளை கவனக்குறைவாக ஓட்டியதே விபத்துக்கு முக்கிய காரணம் என பொலிஸார் தெரிவித்தனர்.

ந்த விபத்தில் வேன் மற்றும் மோட்டார் சைக்கிளின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது.இந்த விபத்து அருகில் உள்ள கடையின் சிசிரிவி கேமராவில் பதிவாகியுள்ளது.