எதிர்வரும் நத்தார் பண்டிகையை முன்னிட்டு லங்கா சதொச நிறுவனம் ஏழு அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது.இது தொடர்பான அறிவித்தலை விடுத்துள்ள லங்கா சதொச, பின்வரும் விலைக் குறைப்புக்கள் இன்று (டிசம்பர் 23) முதல் அமுலுக்கு வரும் என அறிவித்துள்ளது.

அதனடிப்படையில்,

• பெரிய வெங்காயம் – ஒரு கிலோவுக்கு 185.00 ரூபா (5.00 ரூபா குறைக்கப்பட்டது)

• பருப்பு – ஒரு கிலோவுக்கு 374.00 ரூபா (11.00 ரூபா குறைக்கப்பட்டது)

• டின் மீன் (உள்நாட்டு) – 425 கிராம் ஒன்றுக்கு 475.00 ரூபா (15.00 ரூபா குறைக்கப்பட்டது)

• காய்ந்த மிளகாய் – ஒரு கிலோவுக்கு 1,780.00 ரூபா (15.00 ரூபா குறைக்கப்பட்டது)

• நெத்தலி – ஒரு கிலோவுக்கு 1,100.00 ரூபா (50.00 ரூபா குறைக்கப்பட்டது)

• வெள்ளை சீனி – ஒரு கிலோவுக்கு 218.00 ரூபா (6.00 ரூபா குறைக்கப்பட்டது)

• உருளைக்கிழங்கு – ஒரு கிலோவுக்கு 285.00 ரூபா (5.00 ரூபா குறைக்கப்பட்டது)