எதிர்வரும் கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகை காலத்தை முன்னிட்டு 5 அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க லங்கா சதொச தீர்மானித்துள்ளது.

குறைக்கப்பட்ட விலைகள் டிசம்பர் 21 முதல் அமுலுக்கு வரும் என லங்கா சதொசவின் சந்தைப்படுத்தல் முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

அதன்படி பெரிய வெங்காயம் 5 ரூபாய் குறைக்கப்பட்டு 185 ரூபாயாகவும் சிவப்பு பருப்பு 7 ரூபாய் குறைக்கப்பட்டு 378 ரூயாகவும் விற்பனை செய்யப்படும்.அத்தோடு டின் மீன் 10 ரூபாய் குறைக்கப்பட்டு 480 ரூபாயாகவும் சிவப்பு மிளகாய் 15 ரூபாய் குறைக்கப்பட்டு 1780 ரூபாயாவும் நெத்தலி கருவாடு 50 ஆல் குறைக்கப்பட்டு 1100 ஆகவும் விற்பனை செய்யப்படும்.