பரீட்சைக்கு முன்பாகவே வெளியானது வினாத்தாள் : பரீட்சையை இடைநிறுத்த தீர்மானம்!!

கல்வி திணைக்களத்தினால் நடாத்தப்படும் பாடசாலை தவணைப் பரீட்சையின் வினாத்தாள்கள் பரீட்சைக்கு முன்னதாக வெளியாகியுள்ளமையினால் பல பாடசாலைகள் பரீட்சையை இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாக கொழும்பில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் அதிபர் ஒருவர் தெரிவித்தார்.

மேல்மாகாணத்தில் உள்ள சகல பாடசாலைகளிலும் தரம் 10 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கான பரீட்சை இன்று (18) ஐந்தாம் நாளாக நடைபெறவுள்ளதாக தெரிவித்த அவர், மேல்மாகாணத்தில் தவணைப் பரீட்சைக்கான வினாத்தாள்கள் சில நாட்களுக்கு முன்பிருந்தே மாணவர்கள் கரங்களுக்கு சென்றுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

வினாத்தாள்கள் மற்றும் விடைத்தாள்கள் இரண்டும் பிள்ளைகளிடம் இருக்கும் போது பரீட்சை நடத்துவதால் எந்த பயனும் இல்லை எனவும் இதன் காரணமாக கொழும்பில் உள்ள பல பாடசாலைகள் பரீட்சையை இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாகவும் அதிபர் தெரிவித்தார்.

இந்த நிலையில் பரீட்சை நடாத்துவதற்கும் விடைத்தாள்களை சரிபார்ப்பதற்கும் ஆசிரியர்கள் நேரத்தையும் உழைப்பையும் செலவழித்தும் பலனில்லை எனத் தெரிவித்த அதிபர், மேல்மாகாணக் கல்வித் திணைக்களம் இது தொடர்பில் உடனடியாக ஆராய வேண்டும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *