இன்று புதன்கிழமை (16) முதல் அமுலுக்கு வரும் வகையில் மூன்று பொருட்களின் விலையை குறைக்க லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது.

1 கிலோ சிவப்பு அரிசியின் விலை 5 ரூபாயினால் குறைக்கப்பட்டு 205 ரூபாய்க்கு விற்கப்படும்.

1 கிலோ பருப்பு (சிவப்பு) 9 ரூபாய் குறைக்கப்படும் 389 ரூபாய்க்கு விற்கப்படும்.425 கிராம் மீன் டின் 45 ரூபாய் குறைக்கப்பட்டு 540 ரூபாய்க்கு விற்கப்படும்.