க.பொ த. சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு இன்று (திங்கட்கிழமை) கருத்து தெரிவித்த அவர், பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் 80 வீதம் வரை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

விடைத்தாள்களைச் சரிபார்க்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.