ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாள் வழங்கும் முறைமையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி தர்மசேன தெரிவித்துள்ளார்.
புலமைப்பரிசில் பரீட்சையை எதிர்வரும் டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக பரீட்சை ஆணையாளர் இன்று (14) ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தும் போதே தெரிவித்தார்.
இதேவேளை, உயர்தரப் பரீட்சை 2023 ஆம் ஆண்டு ஜனவரி 23 ஆம் திகதி ஆரம்பமாகி 2023 பெப்ரவரி 17 ஆம் திகதி முடிவடையும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்தார்.