போராட்டத்தில் ஈடுபட்ட இரண்டு பெண்களை பொலிஸ் ஜீப்பில் ஏற்றிச் முற்பட்ட போது, ​​பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் இரண்டு பெண் பொலிஸ் அதிகாரிகளின் கழுத்தைப் பிடித்துத் தள்ளிய விதம் கெமராவில் பதிவாகியுள்ளது.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவையின் அழைப்பாளர் வசந்த முதலிகே மற்றும் வணக்கத்துக்குரிய கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோரை விடுதலை செய்யுமாறு கோரி நேற்று (12) இரண்டு பெண்கள் களுத்துறை நகரிலிருந்து காலி முகத்திடலுக்கு எதிர்ப்பு பேரணியை ஆரம்பித்தனர்.

இதனை தடுக்க பொலிஸார் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.எவ்வாறாயினும் நேற்று பிற்பகல் குறித்த இரு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அப்போது, ​​இரு பெண்களையும் அழைத்துச் செல்ல விடாமல் தடுத்த மேலும் மூன்று பேரையும் பொலிஸார் அழைத்துச் சென்றதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.அப்போது அருகில் இருந்த உயர் பொலிஸ் அதிகாரி திடீரென பெண் பொலிஸாரின் கழுத்தை பிடித்து தள்ளினார்.

பின்னர், கைது செய்யப்பட்ட இரு பெண்களும் மற்ற 3 பேரும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.