ஆப்பிள் ஐ-போன் வாடிக்கையாளர்கள் ஏர்டெல், ஜியோ நிறுவனங்களின் அதிவேக 5G சேவைகளை பயன்படுத்த, பீட்டா அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்மூலம் ஐபோன் 12, 13, 14 மாடல் ஆப்பிள் போன் வைத்திருப்பவர்கள் 5 G கனெக்டிவிட்டியை பெற முடியும் என தெரிக்கப்பட்டுள்ளது.

முழுமையான 5G அப்டேட் டிசம்பர் மாதம் வெளியாக உள்ள நிலையில், தற்போது சோதனையோட்டமாக வெளியிடப்பட்டுள்ள இந்த பீட்டா அப்டேட்டை விருப்பம் உள்ளவர்கள், போன் டேட்டாவை Backup செய்துவிட்டு, பதிவிறக்கம் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது