Top line info

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் 40 நாட்களுக்கு முழு கொள்ளளவில் இயங்குவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

தற்போது 100,000 மெட்ரிக் தொன் கச்சா எண்ணெய் இறக்கப்பட்டு வருவதாகவும், அடுத்த வாரம் மேலும் 120,000 மெட்ரிக் தொன்கள் வரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இன்று இரவு விமான எரிபொருள் கையிருப்பு தரையிறக்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிடுகிறார்.

posted by: Toplineinfo