ஓமானில் இந்நாட்டு பெண்களை விபச்சாரத்திற்கு விற்பனை செய்யும் தகவல் வெளியானதையடுத்து, சுற்றுலா விசாவில் ஓமான் மற்றும் துபாய், அபுதாபி உள்ளிட்ட ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளுக்கு செல்ல வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தடை விதித்துள்ளது.

சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு எதிராக தராதரம் பாராது உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் ஜகத் புஸ்பகுமார இன்று (19) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

“இந்த விடயத்தில் தவறு செய்தவர் எவராக இருந்தாலும் நாங்கள் தராதரம் பார்க்க மாட்டோம். தேவையான நடவடிக்கைகளை எடுப்போம்.

சுற்றுலா விசாவில் பயணம் செய்வதை நிறுத்த முடிவு செய்துள்ளோம்.

“ஓமானில் இடம்பெறும் மனித கடத்தல் தொடர்பான பல தகவல்கள் இன்று மாலை 6.55 மணிக்கு Ada Derana இன் பிரதான செய்தித் அறிக்கையில் காட்சிகளுடன் வௌிப்படுத்தப்படவுள்ளது.

By

One thought on “Visiting Visa மூலம் வெளிநாடுகளுக்கு செல்ல முடியுமா !? வெளியானது அதிர்ச்சி தகவல்”
  1. This is really interesting, You’re a very skilled blogger. I’ve joined your rss feed and look forward to seeking more of your great post. Also, I’ve shared your web site in my social networks!|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *